அடுத்த 24 மணிநேரத்தில்... 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 20, 2019 02:05 PM
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவாகும். மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதால், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.