‘கறிக்கடை திறக்க தடை’.. ‘வாரத்துக்கு 3 நாள் மட்டுமே மளிகைக்கடை திறந்திருக்கும்’.. மாவட்ட ஆட்சியர் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்கும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வெளிமாநிலம், வெளிநாடு செல்லாதா வேலூர் மாவட்டத்தை 45 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார்.
அதன்படி மளிகை கடைகள் அனைத்தும் திங்கள், வியாழன், ஞாயிறு என வாரத்தின் மூன்று நாட்கள் மட்டுமே திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஊரடங்கு முடியும் வரை இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையான பால் கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.
இவை தவிர காய்கறிகடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை தினந்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள், பெட்டிகடைகள் எதுவும் திறக்கும் கூடாது. மருந்து கடைகள் வழக்கம்போல இயங்கும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
