‘விமர்சனம் செய்யுற நேரம் இதுவல்ல’... அமைச்சர் அதிரடி பதில்... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 08, 2020 07:35 PM

மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்யாமல் நல்ல ஆலோசனைகள் இருந்தால் வழங்குகள் என்று மக்கள் நீதி மையம் மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Minister Kadambur Raju praises Ajith, Criticises Kamal Hassan!

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  உங்கள் தொலைநோக்கு பார்வை தவறிவிட்டது’  என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’விமர்சனம் செய்யும் நேரம் இது கிடையாது என்றும், நல்ல ஆலோசனை வழங்கலாம் என்றும் கமல்ஹாசனை விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், கொரோனோ நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித்குமாருக்கு நன்றி என்றும், அவரைப் போல அனைத்து நடிகர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்ய முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக் கொண்டுள்ளார்.