சென்னையில் மொத்தமாக 'எத்தனை' பேருக்கு கொரோனா?... 'எந்தெந்த' பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 'பாதிப்பு?'... 'சென்னை' மாநகராட்சி 'தகவல்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மொத்தமாக 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் இதுவரை 690 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 40 பேரும், திருவிக நகர் மண்டலத்தில் 22 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து கோடம்பாக்கத்தில் 19 பேர், அண்ணாநகரில் 15 பேர், தண்டையார்பேட்டையில் 12 பேர், தேனாம்பேட்டையில் 11 பேர், வளசரவாக்கம், அடையாறு, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், பெருங்குடி மண்டலத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
