'அயனாவரம் சிறுமி வழக்கில் தண்டனை பெற்ற கைதி...' 'சிறையில் வைத்து...' லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட காவலாளி பழனி, லுங்கியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர் கடந்த சில நாள்களாக தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சிறைத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடா்பாக அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக இருந்த ரவிக்குமாா், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனா். இவா்களை குண்டா் தடுப்பு காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 5-ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினொன்றாம் தேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 போ் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்ட பதினேழு பேரில் பாபு என்பவா் சிறையிலேயே உயிரிழந்துவிட்டாா்.
இந்த வழக்கில் மகளிா் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 15 பேரை குற்றவாளிகளிகளாக தீர்ப்பளித்து தோட்டகாரராக பணிபுரிந்த குணசேகரை விடுதலை செய்தது. இந்த வழக்கில் பழனி உள்ளிட்ட நான்கு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற செய்திகள்
