மனைவி தூக்கிட்டு தற்கொலை...மனம் உடைந்து புலம்பிய கணவன்...வேதனையில் எடுத்த விபரீத முடிவு....

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 05, 2020 10:16 AM

குடும்பத் தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டதைக் கண்டு, மனம் வெதும்பிய கணவன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Husband and wife commit suicide after family dispute

மானாமதுரை அருகே இளையான்குடியில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர் பெரியசாமி. இவருக்கும் இவரது மனைவி நாகலட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது, ஆத்திரமடைந்த பெரியசாமி, மனைவி நாகலட்சுமியை திட்டியதுடன் தாக்கியும் உள்ளார். பின்னர் குடும்ப தகராறு குறித்து புகார் அளிக்க காவல்நிலையம் சென்றுள்ளார்.

இதற்கிடையே கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக  மனமுடைந்த நாகலட்சுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகலட்சுமி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சித் தகவலை காவல்நிலையம் சென்ற பெரியசாமியிடம்  உறவினர்கள் தெரிவித்தனர். இதனைக்கேட்ட பெரியசாமி மனம் உடைந்து கதறி அழுதார். மனைவியுடன் சண்டையைத் தவிர்த்து சற்று பொறுமையாக இருந்திருக்கலாம் என மனவேதனையுடன் குறிப்பிட்டார்.

அவரை சமாதானப்படுத்திய உறவினர்கள் காவல்நிலையத்திலிருந்து அவரை  அழைத்துச் சென்று, தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அங்கு தனிமையில் இருந்த பெரியசாமியும் மன வேதனையில் புலம்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர்  விடுதி அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் சண்டையிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUCIDE #HUSBAND WIFE HANGED #FAMILY DISPUTE #WIFE COMMIT SUICIDE