‘சாதியை குறிப்பிட்டு கிண்டல் செய்த சீனியர்கள்’, விபரீத முடிவு எடுத்த டாக்டர்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 25, 2019 11:18 PM

சாதி பெயரை கூறி கிண்டல் செய்ததால் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Doctor commits suicide after casteist slurs by seniors in Mumbai

மும்பை BYL நாயர் மருத்துவமனையில் 26 வயதான தாத்வி என்ற பெண் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். மருத்துவர் தாத்வி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் சீனியர் மருத்துவர்களான ஹேமா ஆஜா, பக்டி மேகர் மற்றும் அங்கிதா கண்டலிவால் ஆகிய மூவரும் தாத்வியின் சாதியை குறிப்பிட்டு கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தாத்வி கடந்த புதன்கிழமை விடுதியில் உள்ளே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தாத்வியின் பெற்றோர் காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து புகாரின் பேரில் சீனியர் மருத்துவர்கள் மூவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த தாத்வியின் தாய், ‘மூன்று மருத்துவர்கள் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாக கடந்த புதன்கிழமை எனது மகள் போனில் அழுதுக்கொண்டே கூறினாள். வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றில் என் மகளிடம் சாதி குறித்து கிண்டல் செய்து பேசியுள்ளார்’ என டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரைக்கையில் தெரிவித்துள்ளார். அந்த செல்போனை கைப்பற்றிய போலிஸார், தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தாத்வி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக இரண்டு அறுவை சிகிச்சை செய்ததாகவும், அப்போது அவர் சகஜமாக இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதியை குறிப்பிட்டு கிண்டல் செய்ததால் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags : #MUMBAI #HOSPITAL #DOCTOR #SUCIDE