'குழந்தை இல்லாததால் கணவர் எடுத்த விபரீத முடிவு'... 'வீடியோவால் அதிர்ந்த மனைவி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 27, 2019 01:00 PM

சென்னை அம்பத்தூர் அருகே குழந்தை இல்லாததால், உருக்கமான வீடியோ வெளியிட்டு, கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth committed suicide in chennai video release

அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த ராஜ் - மோகனப்பிரியா தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. அவர்களுக்கு குழந்தை இல்லை. அண்மையில் கருவுற்ற மோகனப் பிரியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கரு கலைந்ததாகவும், இதனால் இருவரும் மனவேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோகனப்பிரியா பரிசோதனைக்கு சென்றார். பிற்பகலில் வீடு திரும்பியபோது அவரது கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவர் தனது மனைவி மோகனப்பிரியாவுக்கு உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றும் கிடைத்துள்ளது. 

அதில், 'உன்னை நான் ரொம்ப லவ் பண்றேன் மோகனா, ஐ மிஸ் யூ மோகனா, எனக்கு வாழவே பிடிக்கவில்லை மோகனா. என்னால் நீ ரொம்ப கஷ்டப்படுற. நானிறந்துவிட்டேன் என்பதற்காக நீ தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். தயவுசெய்து நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும். நீ குழந்தையை பெற்று நல்லா வாழணும். உன்னை நெனைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு' என கூறி இருந்தார். இந்த வீடியோவை பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தது பார்த்த போலீசாரையும் உருகவைத்தது.

Tags : #YOUTH #SUCIDE