தூக்குப் போட்டு தற்கொலை... மகளின் சாவில் சந்தேகம்... கணவன் மனைவி இடையே தகராறு.. ஆர்.டி.ஓ., விசாரணை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 12, 2020 12:00 AM

எம்.ஜி.ஆர்.நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 23; கட்டட தொழிலாளி. இவரது மனைவி தேவி, 20. கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, தேவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக, தேவியின் தந்தை, எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கண்ணனிடம் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், திருமணமாகி, ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Daughter\'s suspect ... husband and wife problem

குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUCIDE