'400 பேரை வேலையை விட்டு தூக்கிய ஐடி கம்பெனி...' 'சீனியர் அதிகாரிகளையும் விட்டு வைக்கல...' ஊழியர்கள் கடும் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐ.டி நிறுவனமான காக்னிசண்ட்டில் முதற்கட்டமாக 400 பணியாளர்களை வேலையை விட்டு எடுக்க முடிவு செய்துள்ளது என்ற தகவல் அந்நிறுவன ஊழியர்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.
![IT company Cognizant has decided to lay off 400 employees IT company Cognizant has decided to lay off 400 employees](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/it-company-cognizant-has-decided-to-lay-off-400-employees.jpg)
ஊழியர்களை பணிநீக்கம் குறித்து காக்னிசண்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இந்த சூழலில் தற்போதைய பொருளாதார நிலவரப்படி, நிறுவனத்தின் நிதி நிலைமையை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எங்கள் காக்னிசண்ட் நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 2.90 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
முதற்கட்டமாக 'தன்னார்வ பிரிப்புத் திட்டத்தின்' கீழ் 400 ஊழியர்களை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தவொரு ப்ராஜெக்ட்டில் ஈடுபடாத ஊழியர்களை மட்டும் மட்டும் தாமாக முன்வந்து பணியில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
மேலும் இந்த 400 பணியாளர்களில் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், துணைத் தலைவர், மேலாளர்கள் உள்ளிட்டோரும் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காக்னிசண்ட்டின் கிளைகளில் மூத்த அதிகாரிகளுக்கு 25% வரையிலான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)