'நம்பி சாமி கும்பிட வந்த பள்ளி மாணவி..' கூல் டிரிங்கில் மயக்க மாத்திரை கலந்து 'கோயில் பூசாரி' செய்த 'கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 18, 2019 10:55 AM
தூத்துக்குடியில் கோவிலுக்கு சாமி கும்பிட போன 11- ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த புகாரில் பூசாரி ஒருவர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு சில மாதங்களாகவே வயிறு வீங்கியவாறு இருந்துள்ளது. அதாவது அந்த மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார். அதன் பின் இறந்த நிலையில் 6 மாத சிசு ஒன்றை அந்த மாணவி பெற்றெடுத்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மாணவியின் பெற்றோர், சிசுவின் சடலத்தை வீட்டின் ஒரு பகுதியில் குழிதோண்டிப் புதைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஊரில் இதைப் பார்த்த சிலர், போலீஸாருக்கு அளித்த தகவலை அடுத்து, காவல்துறை விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், தினமும் கோவிலுக்கு சாமி கும்பிட போன பள்ளி மாணவியை, கோவிலில் பூஜை செய்யும் 48 வயதான பூசாரி ராஜ் என்பவர் ஜாலியாக பேசி கவர்ந்தது தெரியவந்துள்ளது. ஒரு நாள் கோவிலுக்கு அருகிலேயே இருக்கும் தனது வீட்டுக்கு யாரும் பார்க்காத வகையில் மாணவியை அழைத்துச் சென்ற பூசாரி ராஜ், மாணவிக்கு மயக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், இதை வெளியில் சொன்னால் படிப்பு கெட்டுவிடும் என்று மாணவியை மிரட்டி அனுப்பிய பூசாரி, அவ்வப்போது சிறுமியின் வீட்டருகே சென்று சிறுமியை பார்த்து, சிறுமி தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டாரா என உறுதிப் படுத்திக்கொண்டு வந்திருக்கிறார். ஆனால் சிறுமியோ கோவிலுக்கு போவதை நிறுத்தியதோடு, தான் கர்ப்பமானது கூட தெரியாமல், வயிற்று வலியால் வயிறு வீங்கியுள்ளதாக நம்பி அவ்வப்போது மாத்திரை வாங்கி சாப்பிட்டதால் குழந்தை இறந்து பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்த மாதம் தனது மகனுக்கு திருமணம் செய்யவிருக்கும் நிலையில் பிடிபட்டுள்ள பூசாரி ராஜ்க்கு எதிரான வலுவான தடயங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
