'நாங்க உங்க இன்ஸ்டாகிராம் ஃபேன்ஸ்'.. 22 வயது இளைஞரின் ஃபோட்டோவை பார்த்ததும், நேரில் வந்து பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Dec 11, 2019 09:34 PM
மும்பையில் 22 வயது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்திருந்துள்ளார்.

அவர் சமீபத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று, அழகாக ஒரு செல்ஃபியை எடுத்து பந்தாவாக பதிவிட்டுள்ளார். அப்போது அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் 4 ரசிகர்கள், அவரது ஹோட்டல் லொகேஷனை இன்ஸ்டாகிராம் பதிவை வைத்து கண்டுபிடித்து அங்கு வந்து அவரை சந்தித்துள்ளனர்.
அந்த இளைஞரிடம் 4 பேரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, நால்வரும் அவரது ரசிகர்கள் என்று கூறி ஒரு பைக் ரைடுக்கு அழைத்துள்ளனர். அந்த இளைஞரும் அவர்களின் பேச்சில் மயங்கி அவர்களுடன் சென்றுள்ளார். அவர்களோ இளைஞருடன் பைக்கில் சுற்றியதோடு, மும்பை விமான நிலையத்தில் இருந்து காரில் செல்லலாம் என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த 22 வயது இளைஞர் சம்மதம் தெரிவிக்க, அவ்வளவுதான். 3 மணி நேரமாக 4 பேரும் சேர்ந்து இளைஞருக்கு கூட்டு பாலியல் தொல்லை தந்துள்ளனர். அதன் பின்னர் இளைஞரை அடுத்த நாள் காலை காரில் இருந்து சாலை ஓரத்தில் தள்ளிவிட்டு 4 பேரும் எஸ்கேப் ஆகியிருக்கின்றனர். அதில் ஒருவனுக்கு 18 வயதே ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மயக்கம் தெளிந்து எழுந்த இன்ஸ்டாகிராம் இளைஞர் அளித்த புகாரின் பேரில் இளைஞரை வன்கொடுமை செய்த 4 பேரையும் தன் பாலின வல்லுறவுத் தடைச்சட்ட பிரிவு எண் 377ன் கீழ் கைது செய்த போலீஸார், 18 வயது இளைஞரை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலும் மற்றவர்களை சிறையிலும் அடைத்தனர்.
