'விருப்பமில்லாமல் நடந்த கல்யாணம்'...'வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளை'...இளம்பெண் செய்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 17, 2019 04:26 PM

திருமணமான 3 நாட்களில் கணவரை உதறிவிட்டு காதலனுடன் சேர்ந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newly married young girl committed suicide attempt with her boy friend

தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டூரை அடுத்த காலபெருமாள்பட்டியைச் சேர்ந்த முருகன் மகள் ரஞ்சிதா. இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் சாத்தூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான மனோஜ் பாண்டியன் என்பவரும் 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். இவர்களின் காதல் விவகாரம் ரஞ்சிதாவின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இதன்காரணமாக கடந்த 13-ந்தேதி ரஞ்சிதாவை தங்களுடைய உறவுக்கார வாலிபருக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்தார்கள். விருப்பம் இல்லாமல் நடைபெற்ற இந்த திருமணத்தால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். தனது காதலனை மறக்க முடியாமல் அவர் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகி 3 நாட்கள் ஆன நிலையில், புதுமாப்பிள்ளை வீட்டில் இருந்த நிலையில், ரஞ்சிதா திடீரென மாயமானார்.

புதுமண பெண் அதுவும் திருமணமாகி 3 நாட்களில் காணாமல் போனது இருவீட்டாரையும் அச்சமடைய செய்தது. இந்நிலையில் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு மலை அடிவாரத்தில் நேற்று 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும், வாலிபரும் வி‌‌ஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக, அந்த வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த இளம்பெண்ணையும், வாலிபரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது புதுமண பெண் ரஞ்சிதாவும், அவரது காதலன் மனோஜ் பாண்டியன் என்பது தெரியவந்தது. காதலனை மறக்க முடியாமல் தவித்த அவர், தற்கொலை செய்து கொள்ளலாம் என காதலனுடன் சேர்ந்து ரஞ்சிதா  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பெண்ணின் விருப்பம் இல்லாமல் திருமணம் நடைபெற்றதால், காதலனை மறக்க முடியமால் புதுமண பெண் எடுத்த இந்த முடிவு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #YOUNG GIRL #KOVILPATTI #THOOTHUKUDI #NEWLY MARRIED