‘தண்டனை கன்ஃபார்ம்!’.. 'தீர்ப்புக்கு முதல் நாள்'.. பாலியல் குற்றவாளி எடுத்த 'விபரீத முடிவால்' நேர்ந்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 17, 2019 03:40 PM

பாலியல் வழக்கில் தனக்கு எப்படியும் தண்டனை கிடைத்துவிடும் என நம்பி, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் நாளன்று குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Criminal commits suicide fearing death sentence in court

காஞ்சிபுரத்தில் உள்ள காவலன் கேட் அருகே உள்ளது வளத்தீஸ்வரன் கோவில் தோப்புப் பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவர் அதே பகுதியில் உள்ள ஹோட்டலில் பணியாளராக வேலை பார்த்து வந்த நிலையில், அப்பகுதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுமியை அழைத்து திண்ணையில் வைத்து விளையாடியுள்ளார்.

அதுசமயம், யாரும் பார்க்காத நேரத்தில் சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமிக்கு காய்ச்சலாக இருந்ததால், சிறுமியின் அம்மா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமியிடன் வினவ, சிறுமி நடந்தவற்றைக் கூற, இதனால் அதிர்ந்துபோன தாய், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் கோட்டீஸ்வரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் சிறுமியின் பாலியல் வழக்கு விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருந்தது. ஆனாலும் நேற்று முன்தினம்  இதுபற்றி, கோட்டீஸ்வரன் வழக்கறிஞர்களிடம் கேட்டபோது, குற்றம் உறுதியாகிவிட்டதால், அவருக்கு தண்டனையும் உறுதிதான், அதில் இருந்து தப்பிக்க வழியே இல்லை என்றும் கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன கோட்டீஸ்வரன், நேற்று காலை தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

Tags : #SEXUALABUSE #KANCHIPURAM