'டீச்சர்ஸ் 3 பேரும் பிடிச்சுக்கிட்டாங்க!.. என் ட்ரஸ்ஸ கழட்டி'.. 'வீடியோவும் எடுத்து'.. கோவை பள்ளி மாணவன் பரபரப்பு புகார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 16, 2019 04:43 PM

கோவை சூலூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

cade filed against teachers after school boy harassed

இப்பள்ளியின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு கவுன்சில், மாணவர்களிடம் மொபைல் போன்கள் இருக்கிறதா என்று பரிசோதித்துள்ளனர். அப்போது 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் செல்போன் வைத்திருந்ததாக, ஆசிரியர்கள் அம்மாணவனை தனியே அழைத்துச் சென்றதாகவும், அங்கு 3 ஆசிரியர்கள் தன்னை அசையாமல் பிடித்துக்கொள்ள,  பள்ளி முதல்வர் வந்து மாணவனின் ஆடையை அவிழ்த்து செல்போன் இருக்கிறதா என பரிசோதித்ததாகவும், இந்த சம்பவத்தை மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டதாகவும் மாணவன் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பாலியல் குற்றச்சாட்டினை மறுத்துள்ள பள்ளி நிர்வாகம், மாணவன் பேனா கேமரா மற்றும் மொபைல் போன் கேமராக்களை வைத்துக்கொண்டு மாணவிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததாக மாணவிகள் தரப்பில் இருந்து வந்த புகாரினால் மாணவன் பரிசோதிக்கப்பட்டதாகவும், அதனால் மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags : #SCHOOLSTUDENT #COIMBATORE