கணவருடன் சேர்த்துவைப்பதாகக் கூறி அழைத்துச்சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இருவர் – நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்புத் தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொள்ளாச்சி அருகே, கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த பெண்ணை மீண்டும் அவருடைய கணவருடன் சேர்த்து வைப்பதாகக்கூறி அழைத்துச்சென்ற போது இருவர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் கோவை மகளிர் காவல்நிலையம் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

கணவரைப் பிரிந்த மனைவி
பொள்ளாச்சி வடுகபாளயத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தனது இரண்டாவது கணவரைப் பிரிந்து தனிமையில் வாழ்ந்துவந்திருக்கிறார். இந்நிலையில் அவரது குடும்ப நண்பர்களான விமல் ராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் அந்தப் பெண்ணை மீண்டும் அவரது கணவருடன் சேர்த்து வைப்பதாக நம்பிக்கை அளித்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு கணவரிடம் சேர்த்து வைப்பதாகக் கூறி இளம்பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள் விமல் ராஜும் கார்த்திக்கும்.
பலாத்காரம்
ஆட்டோவில் செல்லும்போது, புத்து மாரியம்மன் கோவிலின் அருகே உள்ள மறைவான பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர் இருவரும். அவர்களிடமிருந்து தப்பிக்க இளம்பெண் முயற்சிக்கும்போது இருவரும் அவரைத் தாக்கி பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஜிஷா ஆஜரானார்.
பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விமல்ராஜ், கார்த்திக் ஆகிய இருவருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்திரவிட்டார்.
குற்றவாளி கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கார்த்திக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடுமையாகும் இரவு நேர ஊரடங்கு... சென்னையில் குவிக்கப்பட்ட 10 ஆயிரம் போலீஸார்..!

மற்ற செய்திகள்
