'வாட்ஸாப்பில் காதல் வசனங்கள்...' 'உண்மை என நம்பிய லண்டன் பெண்...' 'மேரேஜ்க்கு பிறகு தெரிய வந்த கணவனின் இன்னொரு முகம்...' - நீதிக்காக காத்திருப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்லண்டனை பூர்விகமாக கொண்ட பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த சென்னையைச் சேர்ந்த எச்.சி.எல் நிறுவன அதிகாரி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவரை பிரிந்த நிலையில் மகளுடன் லண்டனில் வசித்து வந்த பெண்ணிற்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ராஜ்குமார் அய்யாசாமி என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். சென்னை அம்பத்தூர் எச்.சி.எல் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் உள்ள ராஜ்குமார் அய்யாசாமி அப்போது லண்டனில் உள்ள அந்நிறுவனத்தின் கிளையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
நண்பர்கள் மூலம் அறிமுகமான அந்தப் பெண்ணுடன் வாட்ஸாப் சாட் செய்து வந்த ராஜ்குமார் அய்யாசாமி, தனது மனைவியை விவாகரத்து செய்ய போறதாகவும், அதனால் லண்டன் பெண்மணியை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகள் இ-மெயில் மூலமும், வாட்ஸ் அப் மூலமும் ராஜ்குமார் பொழிந்த காதல் வசனங்களை நம்பி அந்த பெண்ணும் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.
சென்னைக்கு பணிமாற்றமான ராஜ்குமார் தனக்கு விவகாரத்து ஆகிவிட்டதாக கூறி, 2014-ம் ஆண்டு லண்டன் பெண்மணியை சென்னைக்கு வரவழைத்து அடையாறில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
திருமண பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத அந்தத் திருமணத்துக்குப் பின் ராஜ்குமார் அய்யாசாமி குணம் மாற தொடங்கியுள்ளது. லண்டன் பெண்மணிக்கு தினசரி பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதல் திருமணத்தை விவாகரத்து செய்யாமல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாக ராஜ்குமார் மீது அடையாறு காவல் நிலையத்தில் லண்டன் பெண் கடந்த 2016-ம் ஆண்டு புகார் அளித்துள்ளார்.
அப்போது நம்பிக்கை மோசடி என்ற பிரிவில் மட்டும் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை அய்யாசாமியை கைது செய்ய, சில நாட்களில் அந்த நபர் பிணையில் வெளியில் வந்துள்ளார்.
இதனையடுத்து நீதிமன்றத்தை நாடிய லண்டன் பெண்மணி, திருமணத்துக்கு முன் ராஜ்குமார் அய்யாசாமி தனக்கு போதை மருந்து கொடுத்து ஆபாசமாக எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து, அவற்றின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என முறையிட்டுள்ளார்.
மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், பாலியல் வழக்கை வெறும் மோசடி வழக்காக மட்டும் பதிவு செய்தது ஏன் என காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்க அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
