"'லேடீஸ்' ஹாஸ்டல், பொண்ணுங்க தனியா இருக்குற வீடுன்னு தேடிப் போய்",,.. அவங்க 'உள்ளாடை' எல்லாம் கிழிச்சு போட்ருக்கான்... பகீர் கிளப்பிய 'இளைஞர்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் விடுதியில் நுழைந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் அருகே விஜய் நகர் பகுதியில் அமைந்துள்ள சில பெண்கள் விடுதிகள் மற்றும் பெண்கள் வசிக்கும் பிளாட்களில் இரவு நேரம் அல்லது அங்கு யாரும் இல்லாத நேரம் பார்த்து நுழையும் மர்ம நபர் ஒருவர், அங்குள்ள பெண்களின் உள்ளாடைகளை எடுத்து கிழித்து எறிந்துள்ளார். இது தொடர்பாக, பல பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். பல நாட்களாக அந்த மர்ம நபர் சிக்காமல் இருந்து வந்துள்ளார்.
சம்மந்தப்பட்ட அந்த நபரை பிடிக்க வேண்டி போலீசார், அப்பகுதியின் பல இடங்களில் சோதனையை துரிதப்படுத்தினர். பெண்களின் விடுதி அருகே சில இடங்களில் அந்த நபர் பதுங்கி இருப்பது தொடர்பாக தகவலும் கிடைத்துள்ளது. மர்ம நபரை பிடிக்க இரவு முழுவதும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், அந்த நபர் ஒரு வீட்டில் நுழைந்ததாக கூறி, அப்பகுதியிலுள்ள ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக போலீசார்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர்.
தொடர்ந்து, அந்த இளைஞரை விசாரித்த நிலையில் அவரது பெயர் ஸ்ரீகாந்த் (வயது 26) என்பது தெரிய வந்தது. மேலும், போலீசார் அளித்த தகவலின் படி, ஸ்ரீகாந்த் முன்னதாக செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மீது கடந்த ஒரு ஆண்டில், சில திருட்டிலும், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகளை அறிந்து கொண்டு அங்கு தவறாக நடந்து வந்தது தொடர்பாகவும் சில புகார்கள் உள்ளது தெரிய வந்தது. அதே போல, தற்போதும் அவர் பெண்கள் விடுதியில் புகுந்து தவறு செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.