'நம்ம முதல்வர் பழனிசாமிய பாத்து கத்துக்கோங்க'... 'வைரலாகும் ட்வீட்'... முதல்வரை பாராட்டிய பிரபலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி, அவர் விவசாய நிலத்தில் நிற்கும் புகைப்படத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் இந்த விழாவினை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
முதல்வர் வயல்களில் அறுவடை செய்து, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு பொங்கலை சிறப்பித்ததை பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இந்நிலையில், வயல்களில் அறுவடை செய்த நெற்பயிருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை பகிர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறார் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''முதல்வர் பழனிசாமி தனது ஆதாரமான விவசாயத்தை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது அவருக்கான அடையாளமாக இருக்கலாம். ஆனால், அது மக்களை உற்சாகப்படுத்துகிறது. விவசாயத்தை லாபகரமாகவும், நிலையானதாகவும் மாற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய காலத்தின் தேவை அது'' என வெங்கையா நாயுடு பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
Pleased to see Chief Minister of Tamil Nadu, Shri Edappadi K. Palaniswami working in fields as a farmer, who will never forget his roots. It may be symbolic but it inspires people. Everyone should focus on making agriculture profitable and sustainable. This is the need of hour. pic.twitter.com/cmcnKWaIHU
— Vice President of India (@VPSecretariat) January 19, 2020