“பசிக்கு பொங்கல் சாப்பிட்ட.. பச்சிளம் குழந்தைகளுக்கு நேர்ந்த”.. “தமிழகத்தையே உலுக்கிய சோக சம்பவம்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 15, 2020 07:50 PM

திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த அம்மன் கோவிலில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். சுரேஷுக்கு 5 வயதில் ஜெயஸ்ரீ என்கிற குழந்தையும், 3 வயதில் தனுஸ்ரீ என்கிற குழந்தையும் உள்ளனர்.

two children aged 5 and 3 dead after eating pongal in tirupattur

தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுரேஷ் என்பவரின் வீட்டிலும் பொங்கல் வைக்கப்பட்டது. இந்நிலையில் வீட்டில் பொங்கிய பொங்கலை சுரேஷ் சாமிக்கு படையல் வைத்துள்ளார். எனினும் குழந்தைகள் பசி தாளாமல் பொங்கலை சாப்பிடத் தொடங்கியுள்ளனர். அதன் பின் இரண்டு பெண் குழந்தைகளும் வாந்தி எடுத்து, பின்னர் மயக்கமடைந்தனர்.

பதறிப்போன சுரேஷ் குழந்தைகளை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கு சிகிச்சைப் பலனின்றி குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பொங்கல் நாளன்று பொங்கலை சாப்பிட்ட பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

Tags : #PONGAL #TIRUPATTUR