'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது'... 'பயணிகளுக்கு சர்ப்ரைஸ்'... அசத்திய விமான நிலையம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 16, 2020 10:44 AM

தமிழர் திருநாளான பொங்கல் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாற்றை பறைசாற்றும் விதமாக வாசலில் கோலம் போட்டு, புது பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தார்கள்.

Chennai : Passengers greeted with Sakkarai pongal on their arrival

வீடுகளின் முன்பு அலங்கார தோரணம், வண்ண விளக்குகளால் வீடுகளை அலங்கரித்து மகிழ்ந்தார்கள். மேலும் தமிழர்களின் பாரம்பரிய உடையன வேட்டி சட்டையை அணிந்து பலரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தார்கள். இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சென்னை விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் வெளியே வந்த பயணிகளுக்கு, விமான நிலைய ஊழியர்கள் சர்க்கரை பொங்கல் கொடுத்து பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்கள். இது பயணிகளுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை அளித்தது. இது தொடர்பான புகைப்படங்களை சென்னை விமான நிலையம் தனது ட்விட்டர் பகத்தில் பகிர்ந்துள்ளது.

Tags : #CHENNAIAIRPORT #PONGAL #PASSENGERS #SAKKARAI PONGAL