‘ஜல்லிக்கட்டு’ போட்டியை பார்க்கப் போன... ‘பெண்ணுக்கு’ திடீரென நடந்த சோகம்... மிரண்ட பார்வையாளர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 16, 2020 02:18 PM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று அவனியாபுரத்தில் தொடங்கிய ஜல்லிக் கட்டுப் போட்டி இன்று மதுரை மாவட்டம் பாலமேடு, புதுக்கோட்டை ரகுநாதபுரம், திருச்சி அருகே உள்ள சூரியூர் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

Trichy Woman died while Seeing Jallikattu in Suriyur

நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இன்று திருச்சி சூரியூரில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகள், 500 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியை திருச்சி உறையூரைச் சேர்ந்த ஜோதி லட்சுமி என்றப் பெண் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பாய்ந்து வந்த மாடு முட்டியதில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோதி லட்சுமி உயிரிழந்தார். இதேபோல் மேலும் 22 பேர் சூரியூரில் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.