பொண்ணுங்க கூட 'என்னய்யா' பிரச்சனை?... தட்டிக் கேட்ட 'காவலர்' வீட்டில்... 'வெடிகுண்டு' வீசிய நபர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மேலமடை பகுதியை சேர்ந்தவர் சலீம். இவரின் மகன் ஷாஜகான், சென்னை மாநகர காவல்துறையின் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். ரம்ஜான் பண்டிகையையொட்டி ஷாஜகான் தனது ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. சத்தத்தைக் கேட்டு பதறி எழுந்த ஷாஜகான் மற்றும் குடும்பத்தினர், இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்க, அங்கு மோப்ப நாயுடன் வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
சில நாட்களுக்கு முன், அப்பகுதியிலுள்ள ரௌடிகள் சிலர் பெண் ஒருவரிடம் வம்பு செய்த நிலையில் அதனை ஷாஜகான் தட்டிக் கேட்டுள்ளார். தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனால் கோபமடைந்த நபர்கள், ஷாஜகானை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக முதற்கட்ட விசரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் சிலரை போலீசார் விசாரித்து வரும் நிலையில் அதிகாலை ஆயுதப்படைக் காவலர் வீட்டில் வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
