மதுரையில் 500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ‘தொழுகை’.. வழக்குப்பதிவு செய்த போலீசார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 21, 2020 01:10 PM

மதுரையில் அனுமதியின்றி தொழுகை நடத்திய 500-க்கும் மேற்பட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Madurai muslims who prayed without permission sued over 500 people

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள அன்சாரி தெருவில் அமைந்துள்ள பொதுப்பாதையில், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இரவு தொழுகை நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர். அனுமதியின்றி பொதுஇடத்தில் தொழுகை நடத்தியதாக 550 ஆண்கள், 50 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.