'மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்...' 'இன்று (மே.4) காலை 8.30க்கு தொடக்கம்...' 'எதில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது தெரியுமா?...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | May 04, 2020 08:41 AM

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று காலை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Madurai meenakshi thirukalyanam will live webcast on Today

சித்தரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று (மே 4 ) காலை 8:30 மணி முதல் 10:15 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அத்துடன், திருக்கோயிலின் முகநூல் பக்கத்திலும், youtube அலைவரிசையிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

இந்த வைபவத்தின்போது, காலை 9:05 முதல் 9:29 மணிக்குள், தாய்மார்கள் மங்கள நாண் மாற்றிக்கொள்ள உகந்த நேரமாகும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.