'எல்லையில்' போர் விமானங்களை நிறுத்தும் 'சீனா...' 'பல ஆயிரம் வீரர்கள் குவிப்பு...' 'கார்கிலுக்கு' பிறகு 'மோசமான பதற்றம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்லடாக்கின் எல்லையோரப் பகுதியில் சீன விமான தளம் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு, போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதை செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.

இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்ட இடமான லடாக்கின் பங்கோங் ஏரியிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சீன விமான தளம். இந்த விமான தனத்தை சீனா புதிதாக விரிவாக்கம் செய்து வருகிறது. மேலும் தனது நாட்டின் சக்திவாய்ந்த போர் விமானங்களையும் அங்கு நிறுத்தி வருகிறது. இதனை செயற்கைக் கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
உலகின் மிக உயரமான விமான தளமான இது, 14,022 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இவ்விமான தளத்தின் முதல் படம் ஏப்ரல் 6-ல் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது படம், கடந்த வாரம் 21-ல் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சீன விமானப்படையின் ஜே -11 அல்லது ஜே -16 போன்று தோற்றமளிக்கும் நான்கு போர் விமானங்கள் ஓடுபாதையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேம்பட்ட வகையைச் சேர்ந்த இந்த போர் விமானங்கள், இந்திய விமானப்படையின் சுகோய் 30 எம்.கே. ஐயின் திறன்களுடன் பொருந்தக் கூடியதாகும்.
இன்னும் சில வாரங்களில் இந்தியாவுக்கு ரபேல் விமானங்கள் வர உள்ளது. அதுவரை சக்தி வாய்ந்த போர் விமானமாக சுகோய் 30 எம்.கே.ஐ விமானங்களே விளங்கி வருகிறது.
உயரமான விமான தளம் என்பதால் சீன போர் விமானங்கள் குறைவான போர் கருவிகளையும், எரிபொருட்களையும் மட்டுமே கொண்டு செல்ல முடியும். அதே சமயம், இப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர் விமானங்கள் சீன விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர் விமானங்களை விட நீண்ட நேரம் பறக்க முடியும் என்கின்றனர் விமான படையினர்.
இதனிடையே, பல ஆயிரம் சீன ராணுவ வீரர்கள் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 1999 கார்கிலுக்கு பிறகு இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள மோசமான பதற்றம் என இதனை ராணுவ அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

மற்ற செய்திகள்
