'மர்மமான முறையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை'... 'சந்தேகத்தை கிளப்பிய அக்கம்பக்கத்தினர்'... 'விசாரணையை முடுக்கிய போலீசார்'... தொடரும் சோகங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 15, 2020 04:07 PM

மதுரையில் பிறந்து நான்கு நாட்கள் ஆனே பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Mysteriously dead baby girl, Neighbors raised suspicion

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர்கள் தவமணி-சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 10 ஆம் தேதி நாலாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்து நான்கு நாட்களே ஆன நிலையில் நாலாவதாக பிறந்த குழந்தை திடீரென உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாக அப் பச்சிளம் குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.

மேலும் குழந்தையின் உடலை வீட்டின் அருகே உள்ள முட்புதரில் புதைத்துள்ளனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து முதற்கட்டமாக குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை தோன்றி உடற்கூறு ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நான்காவதும் பெண் குழந்தை பிறந்ததால் திட்டமிட்டு சிசு கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களகவே, மதுரை மாவட்டத்தில் பெண் சிசு கொலை மீண்டும் தலை தூக்கியுள்ளது, அப்பகுதியில் தொடர்ந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MADURAI #BABY