'வந்தவங்க எல்லாம் சென்னை, மும்பை'... 'சொந்த ஊருக்கு வந்த மக்கள்'... ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 15, 2020 11:00 AM

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 11  பேர் குணமடைந்திருந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்தவர்கள் மூலம் புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது.

Madurai : Number of Corona Positive cases rises in Mellor

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கொரோனாவால் 11 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் குணமடைந்தனர். இந்தநிலையில் சென்னை, மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மேலூர் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்த 3 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது அதே பகுதியிலிருந்து மேலூருக்கு வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர்களில் 2 நபர்கள் மேலூர் சாலக்கிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் முத்திருளாண்டிபட்யைச் சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் கருங்காலக்குடியை சேர்ந்தவர் என்பதும், மீதம் இருவர் காரைக்குப்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதன்முலம் மேலூர் பகுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.