‘இன்னைக்கு ஒருநாள்தான்.. சீக்கிரம் வந்து எடுத்துக்கோங்க’.. சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 23, 2020 02:03 PM

சென்னை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை இன்று மாலைக்குள் எடுத்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Passengers remove their vehicles from CMRL parking areas by today

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை வணிக வளாகங்கள், தியேட்டர் உள்ளிட்டவைகள் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களை முடக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்த வகையில் தமிழநாட்டில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை முடக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் மார்ச் 31ம் தேதி வரை இயக்கப்படாததால், மெட்ரோ ரயில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை இன்று (23.03.2020) மாலைக்குள் எடுத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Tags : #METRO #CHENNAIMETRO #PARKING #PASSENGERS