விமானத்தில் ‘கொரோனா’ அறிகுறியுடன் இருந்த ‘பயணி’... காக்பிட் அறை ‘ஜன்னல்’ வழியாக ‘குதித்த’ விமானி... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 23, 2020 01:44 PM

ஏர் ஏசியா விமானத்தில் பயணி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் காக்பிட் அறையில் இருந்து விமானி கீழே குதித்துள்ளார்.

Suspected Corona Passengers AirAsia Pilot Exits From Window

புனேலிருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் கொரோனா அறிகுறியுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்ளதாக விமானிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில், உடனடியாக மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தின் பின்வாசல் வழியாக கீழே இறக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற சூழல்களில் விமானி முன்வாசல் வழியாக அல்லது அவசர வழியில் கீழே இறங்க வேண்டும். எனவே விமானி காக்பிட் அறையிலிருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்துள்ளார். அதன்பின் கொரோனா அறிகுறியுடன் இருந்த அந்த நபரை மருத்துவ குழுவினர் சோதனைக்கு உட்படுத்தியதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

 

 

Tags : #CORONAVIRUS #AIRASIA #PILOT #PLANE #VIDEO