சென்னை மெட்ரோ ரயிலில் புதிய திட்டம்... ‘இன்னும் சில நாட்களில்’... வருகிறது புதிய ஆப்... எதற்காக தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 25, 2020 03:24 PM

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை கவருவதற்காக புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது. 

Chennai Metro Rail Limited is set to launch ‘Sugarbox’ APP

ரயிலில் பயணம் செய்யும் போது வீடியோக்கள், திரைப்படங்களை இலவசமாகப் பார்க்கவும் டவுன்லோடு செய்யவும் பயணிகளைக் கவரும் விதமாக இந்தத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்காக உருவாக்கப்படும் வைஃபை மூலம் திரைப்படங்கள், வீடியோக்களை பார்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும். இந்த வசதி இந்த வார இறுதி முதல் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் செய்ய வேண்டியதெல்லாம் சுகர்பாக்ஸ் என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீடியோக்களை இலவசமாகப் பார்க்கலாம். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகியவை உட்பட்ட மொழிகளில் பயணிகள் தொலைக்காட்சித் தொடர்கள் முதல் திரைப்படங்களை பயணத்தின் போதும் பார்க்கலாம் அல்லது டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டு ஆஃப் லைனிலும் பார்க்கலாம்.

திரைப்படம் ஒன்றை டவுன் லோடு செய்ய ஆகும் நேரம் வெறும் 10 நிமிடங்கள்தான். இந்த ஆப் இத்தகைய அதிவேக டவுன்லோடு வசதி கொண்டதாகும். பயணத்தின் போது பயணிகளை மகிழ்விக்கவும் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கவே இந்த ஏற்பாடு என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

Tags : #METRO #CHENNAIAIRPORT #APP #SUGARBOX