'பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கியப் பெண்'... 'அதிர்ந்த பயணிகள்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Jun 13, 2019 01:40 PM

காதலியுடன் சிக்கிய பேருந்து ஓட்டுநரை அவரது மனைவி சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Furious wife confronts cheating husband as he drives bus

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் கடந்த வெள்ளியன்று ஜீப் போன்ற பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அதனை வழிமறித்த பெண் ஒருவர், முன்பக்க ஜன்னல் வழியாக நுழைந்து ஓட்டுநரான தனது கணவரை சரமாரியாகத் தாக்கினார்.

இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், '12 குழந்தைகள் நமக்கு உள்ளநிலையில், வேறு ஒரு பெண்ணுடன் எப்படி சுற்றலாம்' என்று கூச்சலிட்டபடியே, தனது கணவரை  இடைவிடாமல் தாக்கினார். மேலும் அதேப் பேருந்தில் இருந்த தனது காதலியை தாக்கிவிடாமலிருக்க, அவரைத் தப்பிச் செல்லுமாறு ஓட்டுநர் கேட்டுக் கொண்டார். பின் அந்த பெண்ணும் பின்பக்க வழியாக தப்பி ஓடினார்.

இதனால் அங்கிருந்த பயணிகள் நேரத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர். ஒரு சில பயணிகளோ,  மனைவிக்கு  ஆதரவாகப் பேசினர்.  இதையடுத்து பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டு போக்குவரத்து போலீசார் வந்து சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #PHILLIPHINES #ATTACK