'ரம்மி' விளையாடி,விளையாடி இப்படி ஆகி போச்சே'... 'தம்பதியருக்கு' நிகழ்ந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 21, 2019 01:56 PM

கணவனும் மனைவியும் ஒரே கயிற்றில் சடலமாக இறந்து கிடந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Couple Committed Suicide due to lose their money in playing Rummy

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த வேங்கட சுப்ரமணியன் - பட்டு மீனாட்சி தம்பதியரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை திறந்து உள்ளே செல்ல முயற்சித்தனர்.ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து கதவை உடைத்த காவல்துறையினர்,வீட்டின் மாடிக்குச் சென்று பார்த்த போது,கணவனும் மனைவியும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கி சடலமாகக் கிடந்தனர்.இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் இருவரின் உடலும் அழுகிய நிலையில் இருந்தது.இதையடுத்து இருவரது சடலங்களையும் மீட்ட காவல்துறையினர்,பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வீட்டில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினருக்கு கடிதம் ஒன்று சிக்கியது.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்த தகவலில் 'வீட்டிலிருந்த  நகைகள், செல்போன்கள், கார் தொடர்பான விவரங்களை வேங்கட சுப்ரமணியன் எழுதி வைத்துள்ளார்.மேலும் ஆந்திராவைச் சேர்ந்த வேங்கட சுப்ரமணியன்,காமராஜர் பல்கலைக் கழகத்தில் டேட்டா அனலிசிஸாக பணியாற்றி வந்துள்ளார்.அப்போது அவரிடம் பயிற்சிக்கு வந்த பட்டு மீனாட்சியை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில்  வேங்கட சுப்ரமணியன், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகவும் அடிமையாகி விட்டதாக, அவரது மனைவி அக்கம் பக்கத்தினருடன் கூறி கவலை பட்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இருவரும் ரம்மி விளையாட்டில் கடனாளியாகி தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.இருப்பினும் திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்காத விரக்தியிலும் இந்த முடிவை எடுத்திருக்கலாம்,என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : #RUMMY #MADURAI #SUICIDE #COUPLE