'பேருந்தில் இளம்பெண்களுக்கு நடந்த கொடூரம்'... 'முத்தமிடக்கோரி அடித்து உதைத்த கும்பல்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Jun 07, 2019 11:18 PM

லண்டனில் பேருந்தில் பெண்களை தாக்கி இளைஞர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

girls brutally beaten by group of men on bus in London

லண்டன் மாநகரத்தில் உள்ள கேம்டன் டவுனில் ஒரு பேருந்தில்  28 வயதான மெலானா கெய்மோட் என்ற பெண், தனது பெண் தோழியுடன் கடந்த மே 30-ம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பேருந்தில் பயணித்த ஆண்கள் சிலர், இரு பெண்களை நெருங்கி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டனர்.

மேலும் இருவரையும் ஓரினச் சேர்கையாளர்கள் என்றும் கருதிய ஆண்கள், தங்களுக்கு முத்தம் தரும்படி கேட்டு, தவறாக நடந்துள்ளனர். ஆனால் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வற்புறுத்தி இரு பெண்களை தொல்லை செய்தனர். ஒருகட்டத்தில் பெண்களை பலமாக தாக்கி, முகத்தில் குத்தினர். இதில் இருவருக்கும் முகத்தில் ரத்தம் வழிந்தது.

பின்னர் இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவத்தன்று வெஸ்ட் ஹேம்ஸ்பெட்டில் ஸ்டாப்பில் சென்ற போதுதான் இது நடந்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மெலினா தனது முகநூல் பக்கத்தில் ரத்தக் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெண்கள் மற்றும் தன்பாலின உறவு ஈர்ப்பாளர்களுக்கு நடக்கும் தாக்குதல் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது.

Tags : #ATTACK #YOUTH #LONDON