‘முதல்முறை வயலின் இசையைக் கேட்ட குழந்தை செய்த காரியம்..’ இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | May 28, 2019 06:18 PM

முதல்முதலாக வயலின் இசையைக் கேட்கும் குழந்தை ஒன்று அதை மெய்மறந்து ரசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

viral video baby hears violin for the first time reaction wins intenet

நியூயார்க்கைச் சேர்ந்த ரேச்சல் ஆட்ரே என்பவர் தனது 11 மாத மகன் தாமசை குழந்தைகளுக்கான இசை முகாம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இசைக்கலைஞர் ஒருவர் வயலின் வாசிப்பதை முதல்முதலாகக் கேட்கும் குழந்தை அவருக்கு அருகில் சென்று அதையே ரசித்துக் கேட்கிறது. அப்படியே அவர் காலருகே உட்கார்ந்து கொள்ளும் குழந்தை அவர் வாசிப்பதைக் கேட்டு அவருடைய கால்களைக் கட்டிக் கொள்கிறது.

இதைக் குழந்தையின் தாய் ரேச்சல் வீடியோவாக எடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் வயலின் இசைக்கு குழந்தையின் ரியாக்‌ஷன் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

Tags : #VIRAL #VIDEO #MUSIC #VIOLIN #BABY