'இந்த' மாதிரி வெளையாடினா.. 'கோலி'க்கு தான் பெரிய 'தலைவலி'.. ஹிட்மேன் யாரை சொல்றாரு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 11, 2019 12:20 PM
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வில் இருப்பதால் தற்போது துணை கேப்டன் ரோஹித் சர்மா அணியை வழிநடத்தி வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

நேற்றைய வெற்றிக்குப்பின் கேப்டன் ரோஹித் பேசுகையில், '' நேற்றைய போட்டியில் பந்து வீச்சாளர்களின் பங்கு அபாரமாக இருந்தது. அதேபோல ஷ்ரேயாஸ், ராகுல் ஆகியோரின் பேட்டிங்கும் அற்புதமாக இருந்தது. அவர்கள் மனதளவில் தளர்ந்தபோது நான் அணியின் ஜெர்ஸியை காட்டி அவர்களை உற்சாகப்படுத்தினேன்.
தனிநபர்கள் பொறுப்பை எடுத்து கொள்கிறார்கள். ஒரு டீமாக நாங்கள் விரும்புவது இதைத்தான். வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை முன்பு அணியின் சரியான சமநிலையை நாங்கள் கண்டறிய வேண்டும். இப்போது அணியில் இல்லாதவர்களுக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கும்.
ஆஸ்திரேலிய டூருக்கு முன் உள்ள போட்டிகள் தற்போது மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படியே நாங்கள் தொடர்ந்து விளையாடினால் யாரை தேர்வு செய்வது? என்பதில், விராட் மற்றும் அணி தேர்வாளர்களுக்கு பெரிய தலைவலி இருக்கும்,'' என்றார்.
இந்திய அணி வருகின்ற வியாழக்கிழமை வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
