அந்த '5 பேருக்கும்' இத்தனை கோடியா?.. யாரெல்லாம் 'லிஸ்ட்ல' இருக்காங்க பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 15, 2019 11:46 AM

வீரர்களை அணிமாற்றம் செய்வது, பிற அணிகளில் இருந்து வீரர்களை எடுப்பது ஆகியவை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அணிமாற்றம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், மும்பை அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக்கொண்டன.

IPL2020: Chennai Super Kings maybe release these 5 players

அதே நேரம் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற அணிகள் இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தன. தொடர்ந்து நேற்று மாலை சென்னை அணி தங்கள் அணியில் இருந்து 5 வீரர்களை இன்று மாலை விடுவிப்பதாக அறிவித்தது. இதனால் அந்த 5 வீரர்கள் யார்? என அறிந்துகொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னை அணியில் இருந்து கடந்த சீசனில் சரியாக விளையாடாத மோஹித் சர்மா, முரளி விஜய், கரண் சர்மா, கேதார் ஜாதவ், டேவிட் வில்லே ஆகிய 5 வீரர்கள் அணிமாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தநிலையில் ரசிகர் ஒருவர் இவர்கள் ஐவரையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்த தொகையை வெளியிட்டுள்ளார். மொத்தம் 21.8  கோடிகள் வருகிறது.

இந்த 5 பேரையும் சென்னை அணி விடுவிக்கும் பட்சத்தில் வருகின்ற ஏலத்தில் சென்னை அணியின் கையிருப்பு தொகை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #CSK