'5 ரூபாய்க்கு புடவை.. 1 ரூபாய்க்கு லுங்கி!'.. 'ஆனா ஒரு கண்டிஷன்'.. ஜவுளி கடையின் அசத்தல் ஆஃபருக்கு குவிந்த கூட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 31, 2019 01:45 PM

5 ரூபாய்க்கு புடவையும், 1 ரூபாய்க்கு லுங்கியும் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்த கடை முன் கூட்டம் பெருகியதால், திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TN textile offers sarees for 5 rupee and lungi for 1 rupee

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 5 ரூபாய்க்கு புடவையும், 1 ரூபாய்க்கு லுங்கியும் விற்பனை செய்யப்படும் என்று வந்தவாசி பஜார் சாலையில் உள்ள சர்கார் சில்க்ஸ் என்கிற துணிக் கடை  நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தக் கடையின் 51ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதியான இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் இருக்கும் கண்டிஷன் என்னவென்றால், 5 ரூபாய் நாணயத்திற்குத்தான் புடவையும், 1 ரூபாய் நாணயத்திற்குத் தான் லுங்கியும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து கடை முன்பு பெருந்திரளான மக்கள் குவிந்துள்ளனர். இதனால் பஜார் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Tags : #THIRUVANNAMALAI #TEXTILE #OFFER