‘திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழா’... ‘இப்படி வரும் பக்தர்களுக்கு’... 'தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 06, 2019 11:21 PM

திருவண்ணாமலையில் மகா தீப திருவிழாவை முன்னிட்டு சுற்றுச் சூழலை பாதுகாக்க, புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

cold and silver coin for devotees in thiruvannamalai

திருவண்ணாமலையில் திருக் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம், வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பூஜை சாமான்கள், திண்பண்டங்கள், விளையாட்டு சாமான்களை ஆகியவற்றை எடுத்துச் செல்ல, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், விழா காலத்தில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பிளாஸ்டிக் கேரி பைகளுக்கு மாற்றாக துணிப்பை, சணல் பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற தூக்கு பைகளை எடுத்துவரும் பொதுமக்களுக்கு கூப்பன் வழங்கப்படும். பின்னர் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நபர்களுக்கு, தலா 2 கிராம் தங்கம் மற்றும் 72 நபர்களுக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட உள்ளது. 

Tags : #THIRUVANNAMALAI #DEEPAM #KARTHIGAI