‘திடீர்னு வந்த அலெர்ட்’.. டாக்டர் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..! எப்படி தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Nov 27, 2019 11:39 AM

அமெரிக்காவில் ஆப்பிள் வாட்ச் மருத்துவர் ஒருவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

Apple Watch saves 79 year old man’s life, Here’s how

ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரத்தில் பல நவீன வசதிகள் உள்ளன. அதில் கைக்கடிகாரத்தை அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பை கண்காணிக்கும் தொழில்நுட்பமும் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணம் வகோவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ரே எமர்சன் (79) என்பவர் ஆப்பிள் கைக்கடிகாரத்தை பயன்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவருக்கு இதயத்துடிப்பு சீராக இல்லாமல் இருந்துள்ளது. இதனை கண்காணித்த ஆப்பிள் கடிகாரம் அதுகுறித்து ரே எமர்சனுக்கு அலெர்ட் செய்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பினால் ஏற்படும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (atrial fibrillation) கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த ரே எமர்சன், தனது உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்சை விலைமதிப்பற்றதாக கருதுவதாக தெரிவித்துள்ளார். இதுபோல் பல சம்பவங்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #APPLE #WATCH #OLDMAN #TEXAS