'ஆண்களுக்கு, யாரும் பொண்ணு கொடுக்க முன்வரல'.. ஒரு கிராமத்துக்கே வந்த சோதனைக்கு காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 07, 2019 12:27 PM

தண்ணீர் இல்லாமல் தத்தளிப்பதால், திருமண வயதையெட்டிய ஆண்களுக்கு பெண் கொடுக்க யாரும் முன்வராத அவலம் கிராமமொன்றில் அரங்கேறியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

no one is ready to give bride for this village youths, here is why

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் அருகே உள்ளது தென்னமாரி என்கிற ஊர். 100 குடும்பங்கள் கிட்டத்தட்ட வசிக்கும் இந்த ஊரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் சைக்கிள், மோட்டார் பைக் என புறப்பட்டு 3 கி.மீ தூரம் சென்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும் அவலம் நிலவுகிறது.

குடிநீர் தேக்கத் தொட்டியின் பைப் லைன் உடைந்துபோனது உள்ளிட்ட சிறு காரணங்களால் இத்தகைய அவதிக்குள்ளாகும் இவ்வூரில், ஆண்கள் இல்லாத வீட்டுப் பெண்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருவது இன்னும் சிரமமாம். இத்தகைய தண்ணீர் பஞ்சத்தால் இங்கு பல பின்னடைவுகள் இருக்கின்றனவாம்.

‘தண்ணி இல்லாத காடு’ என்று அதிகாரிகள் வர மறுப்பது, தேர்தல் தவிர்த்த நேரங்கள் அரசியல்வாதிகள் வர மறுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளை இம்மக்கள் சந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  இவை எல்லாவற்றிலும் கொடுமையாக தண்ணீர் பிரச்சனையால் படித்த, பட்டதாரி, இன்ஜினியர்கள் என யாராக இருந்தாலும் யாரும் பெண் கொடுக்க முன்வராததால் 35 வயதாகியும் திருமணமாகாத ஆண்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனாலேயே கொஞ்ச நாளில் பலரும் நல்ல வாழிடம் நோக்கி நாடோடிகள் புலம் பெயர வாய்ப்புள்ளதாகவும், இதைத் தீர்க்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் இந்த ஊர் இளைஞர்கள் கோரிக்கை வைப்பதாக, விகடன் இதழுக்கு பேட்டியளித்துனர்.

Tags : #WATERPROBLEM #SAVEWATER #PUDUKOTTAI #WATERSCARCITY