‘என்னடா இது புது டெக்னிக்கா இருக்கு! உங்க நட்சத்திரத்த முதல்ல சொல்லுங்க’.. விநோத முறையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 28, 2019 01:03 PM

நோயாளிகளின் நோயை கண்டுபிடிக்க ஜோதிடத்தை பயன்படுத்தும் தனியார் மருத்துவமனை.

hospital in Jaipur looks at patients horoscope to find the disease

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் நோயை கண்டறிய ஜோதிடத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அந்த மருத்துமனையில் உள்ள சர்மா என்ற ஜோதிடர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பிறந்த தேதி, நட்சத்திரம் உள்ளிட்ட தகவல்களை பெற்று அவர்களுக்கு என்ன நோய் தாக்கியிருக்கிறது என்று கண்டுப்பிடிக்கிறோம். மேலும், ஒரு நாளுக்கு 25 முதல் 30 பேரின் ஜாதகத்தின் மூலம் நோய் கண்டறியப்படுவதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர் அவர்களுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் ஜோதிடத்தோடு, மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு இரண்டடையும் ஒப்பிட்டு பார்த்த பின் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இது நோயாளிகளுக்கு திருப்தி அளிப்பதாகவும் அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #JAIPUR #HOSPITAL #NEW METHOD #TREATMENT