‘எங்கள் நெஞ்சில் குடியிருக்கும்..’ பிரபல வீரருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சிஎஸ்கேயின் வைரல் ட்வீட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 03, 2019 01:14 PM

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் கடந்த இரண்டு சீசனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

CSK wishes Harbhajan Singh on his birthday tweet goes viral

சிஎஸ்கே ரசிகர்களைக் கவர்வதற்காக ஐபிஎல் தொடரின்போது ஹர்பஜன் அடிக்கடி தமிழில் ட்வீட் செய்து அசத்துவது வழக்கம். அவரது ட்வீட்டுக்கு ரசிகர்களும் ஆர்வமுடன் பதிலளிப்பார்கள். லைக், ஷேர் செய்து ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பால் அவரும் தமிழில் ட்வீட் செய்வதைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சிஎஸ்கே அணி அவருடைய பாணியிலேயே அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளது.

சிஎஸ்கே அணி ட்விட்டரில், “எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் ஹர்பஜன் சிங் அவர்களே! உங்கள் தமிழ் பற்றை கண்டு வியந்தோம். தாடி-மீசை வச்ச குழந்தையை மஞ்சளில் கண்டோம். சிலம்பத்திறனை கண்டு பிரம்மித்தோம். எப்பொழுதும் போல் சிங்க நடை போட்டு சிகரத்தை அடைவீராக! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், சிங்கு!” என ட்வீட் செய்துள்ளது.

 

 

 

Tags : #CHENNAI-SUPER-KINGS #CSK #HARBHAJANSINGH #BIRTHDAY #VIRALTWEET