வெளிநாட்டில் இருக்கும் 'கணவர்' பேசாததால்... புது மணப்பெண் எடுத்த 'விபரீத' முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமான 7 மாதங்களில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த சுகந்தி(24) என்பவருக்கும், தஞ்சை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ராஜா(33) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணமாகி 2 மாதங்களுக்கு பின் ராஜா வெளிநாடு சென்று விட்டார்.
இதையடுத்து சுகந்தி ராஜாவின் வளர்ப்பு தந்தை வீட்டில் சென்று இருந்தார். இதற்கிடையில் சுகந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை ராஜாவின் வளர்ப்பு தந்தை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் சுகந்தியின் கணவர் ராஜா அவரிடம் சரியாக பேசாததால் சுகந்தி மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வேளாங்கன்னி போலீசாரும், நாகை மாவட்ட உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
