'மச்சி சென்னை சென்னை தாண்டா'... 'ஆளே இல்லாமல் எப்படி இருக்கும்'? ... 'DRONE'ல் மின்னிய நம்ம 'சென்னை'... காவல்துறை வெளியிட்ட வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 17, 2020 01:33 PM

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் நமது சிங்கார சென்னை தற்போது நிசப்தமான அமைதியில் உள்ளது.

Chennai City Police released the Aerial View of Chennai City

எந்த ஊருக்காரங்க சென்னைக்கு வந்தாலும், அவர்களின் சொந்த ஊராகவே மாறிப் போகும் ஒரே ஊரு என்றால் அது சென்னை மட்டுமே. அதனால் தான் சென்னையைக் குறிப்பிடும் போது மட்டும், நம்ம சென்னை எனக் கூறுவதில் ஏனோ ஒரு தனி பிணைப்பு இருக்கிறது. தற்போது சென்னையில் நிலவும் அமைதி என்பது நமது வாழ்நாளில் ஒரு நாளும் பார்த்திராத ஒன்று தான். இனிமேலும் இப்படி ஒரு அமைதியை நிச்சயம் பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது என்பது தான், அனைவரின் விருப்பமாக இருக்கும்.

அதே நேரத்தில் நம்ம மனுஷ மனம் குரங்கு தானே, இந்த அமைதியில் நம்ம சென்னை எப்படி தான் இருக்குமோ என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கும். அதைப் பார்க்க மனசு துடிக்கும். ஆனால் அரசு உத்தரவை நாம் நிச்சயம் மதித்துத் தானே ஆக வேண்டும் 'ப்ரோ'. ஆனால் கவலைபடாதீங்க, நம்ம சென்னை தற்போது எப்படி இருக்குமோ, அத பாக்கணுமே என ஆசையா ஏங்கியவர்களின் ஆதங்கத்தைத் துடைக்கச் சென்னை காவல்துறை அருமையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Drone கேமரா மூலம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, நம்ம சிங்கார சென்னையில் கொள்ளை அழகை நமது கண்முன்னே திரையிட்டுக் காட்டியிருக்கிறது. 'மச்சி, சென்னை சென்னை தாண்டா'!