'இது' இல்லாம 'வெளியே' வராதீங்க... மீறுனா 'நடவடிக்கை' எடுப்போம்: சென்னை மாநகராட்சி
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநகராட்சிக்குள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதையடுத்து வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை பகுதியில் உள்ள மக்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. மேலும், ''வீட்டை விட்டு வெளியே செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் சென்றால், வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் வெளியே செல்வதற்கான சிறப்பு அனுமதி சீட்டு போன்றவை ரத்து செய்யப்படும்,'' என தெரிவித்து இருக்கிறது.
Tags : #POLICE #CORONA #CORONAVIRUS
