ஊரடங்கால் 'சென்னை'யில் நடந்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 17, 2020 07:10 PM

ஊரடங்கால் மக்களுக்கு பல்வேறு வழிகளில் சிரமங்கள் ஏற்பட்டாலும் அவற்றால் சில நன்மைகளும் நடைபெற்று இருக்கின்றன. அந்த வழியில் ஊரடங்கு காலத்தில் சுமார் 79% குற்றங்கள் குறைந்து இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

Due to Lockdown, Crimes dropped 79 Percent in Chennai

ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. சாலையில் வாகன நடமாட்டம் பெரிதும் இன்றி பெரும்பாலான நேரங்களில் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும் கடந்த ஊரடங்கை விட இந்த ஊரடங்கு இன்னும் கடுமையாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் குற்ற சம்பவங்கள் 79% குறைந்து இருப்பதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. கொலை வழக்கில் 44%, கொள்ளை வழக்கில் 75%, வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59% என்ற அளவில் குற்றங்கள் குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஊரடங்கால் சென்னையில் காற்று மாசுபாடு கணிசமாக குறைந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.