“பேஸ்புக்க பாத்து பண்ணோம்!”.. கள்ளச்சாராயம் காய்ச்சி ‘டிக்டாக்கில்’ வெளியிட்ட இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டிவனம் மற்றும் ஓலக்கூர் பகுதியில் சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுப்பிரியர்கள் சாராயத்தைத் தேடி அலைகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் டாஸ்மாக் கடைகளைத் திறந்து மது விற்பனை செய்தவர்களை திண்டிவனம் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதன் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட அப்போது சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட 5 பேரை திண்டிவனம் போலீஸார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நோய்த்தொற்று பரவாமல் இருக்க, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தேனி மாவட்டம் போடியில் வீட்டுத் தொழுவத்தில் முகநூலைப் பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டாக்கில் வெளியிட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags : #CORONA #CORONAVIRUS #LIQUOR #POLICE