சாப்பாடு கொடுத்த ‘சமூக ஆர்வலருக்கு’ கொரோனா தொற்று.. ‘கோவையில்’ 40 போலீசாருக்கு தீவிர பரிசோதனை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துடியலூரில் போலீசாருக்கு உணவு விநியோகம் செய்த தன்னார்வலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை வடமதுரை கோத்தாரி லே அவுட் பகுதியை சேர்ந்த 61 வயது தன்னார்வலர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக துடியலூர் காவல்துறையினருக்கு உணவு விநியோகம் செய்து வந்துள்ளார். மேலும் போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சீரமமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 40 காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 61 வயது நபர் மார்ச் 23ம் தேதி இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு இரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது நெகட்டீவ் என வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.