'அதிர்ச்சி'... 'இரவு பகலா மக்கள் பணி'... 'இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான 'முதல் காவல் அதிகாரி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் முதல் முறையாக காவல்துறை உதவி ஆணையர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காவல்துறை உதவி ஆணையாளராக பணியாற்றி வருபவர் அனில் கோலி. மக்கள் பணியில் அயராது பணியாற்றி வந்த இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழ்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனில் கோலி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மக்களைக் காக்க அரும்பாடு படும் காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Punjab: Ludhiana Assistant Commissioner of Police Anil Kohli passes away due to #COVID19 at SPS Hospital in Ludhiana, says District Public Relations Office pic.twitter.com/C0bW62J9MO
— ANI (@ANI) April 18, 2020
